தெய்வீகப் பார்வை…தெய்வீகப் பொறுமை: பாடுகளுக்கு பங்காளிகள் சிலாக்கியம்

Home » தெய்வீகப் பார்வை…தெய்வீகப் பொறுமை: பாடுகளுக்கு பங்காளிகள் சிலாக்கியம்

தெய்வீகப் பார்வை…தெய்வீகப் பொறுமை: பாடுகளுக்கு பங்காளிகள் சிலாக்கியம்

கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளிகளான நாம் அவருக்காக பணி செய்யும்பொழுது கட்டாயம் பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கிறது. அந்தப் பிரச்சனைகளெல்லாம் நாம் செய்யும் இறைப்பணியில் ஒரு பங்குதான். அந்தப் பிரச்சனைகளை எப்படிக் கையாளவேண்டும் என்பதுதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடமாக இருக்கிறது.

நாம் தேவபிள்ளைகளாக இருக்கிறபடியால் பிரச்சனைகளின் மத்தியிலும் தேவபெலன் நம்மைத் தாங்குகிறது, தேவ ஒத்தாசை நமக்கு இருக்கிறது. சூழ்நிலைகள் குழப்பமாக இருந்தாலும் வாக்குத்ததங்கள் மாறுவதில்லை. நாம் துன்பப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை. கலக்கமடைந்தாலும் மனமுறிவு அடைவதில்லை. ஏனெனில் நாம் நம்மீது நம்பிக்கை வைக்காமல், அவர்மீது நம்பிக்கை வைக்கிறோம்.

பாடுகளுக்கு நாம் விலகி ஓடாமல் அழைப்பில் நிலைத்திருக்கும்போது கர்த்தருடைய கிருபையினால் அந்தப் பாடுகளே நமக்கு பெலனாக மாறுகிறது. கர்த்தராகிய இயேசு தமக்கு முன் வைக்கப்பட்ட சந்தோஷத்தின் பொருட்டு சிலுவையை சகித்து வெற்றி சிறந்ததுபோல, அவருடைய பங்காளிகளாகிய நாமும் அதேவழியில் பாடுகளை ஜெயிக்க அவர் நமக்கு உதவி செய்கிறார்.

ஆகவே கிறிஸ்துவின் நிமித்தம் நாம் படும் பாடுகள் ஒருவகையில் தியாகம் என்ற கணக்கில் சேர்ந்தாலும், நமக்காக அவர் செய்த தியாகத்தோடு ஒப்பிடுகையில் நம்முடைய தியாகங்கள் ஒன்றுமே இல்லை என்று நமக்குத் தோன்றும். கிறிஸ்துவின் நிமித்தம் படும் பாடுகளை சிலாக்கியமாகக் கருதுவோம். அவரே நம்மை பெலப்படுத்துவாராக!

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/Q8h0CkiqgEk

>