தேவனற்றவைகளுக்கு தேவனுக்குரிய இடத்தைக் கொடுப்பதே விக்கிரக ஆராதனை. விக்கிரக ஆராதனை இருக்கும் இடத்தில் தேவனுடைய வழிமுறைகளும் இல்லாமல் போய்விடும். மனிதன் சேவிக்கும் முக்கியமான விக்கிரகமாக பணம் இருக்கிறது. பணத்தை பற்றிக்கொண்டால் தேவனைப் பற்றிக்கொள்ள முடியாது. பணத்தையும், தேவனையும் ஒருசேரப் பற்றிக்கொள்ளவும் முடியாது.
பணம் மனிதனின் குணத்தை மாற்றாது ஆனால் தேவன் நாம் இருக்கிற வண்ணமாகவே நம்மை ஏற்றுக்கொண்டு அவர் இருக்கிற வண்ணமாக நம்மை மாற்றுகிறார். நமக்கு புரிந்துகொள்ளுதல் உண்டாகும்படி அவரே நமக்கு புத்தியைத் தருகிறார். இது முழுக்க முழுக்க அவருடைய ஈவு. ஐசுவரியம் விருத்தியானால் மனதை அவர்மீது வைக்காமல் இருக்க அவரே நமக்கு பெலன் தருகிறவராக இருக்கிறார்.
மெய்யான ஆராதனை என்பது வார்த்தையினாலும், கிரியைகியாலும் எதைச் செய்தாலும் இயேசுவின் நாமத்தினால் பிதாவுக்கு மகிமையாக செய்வது. அவர் நமக்கு வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறார், வரங்களைக் கொடுத்து அவற்றைப் பயன்படுத்த வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அந்த வாய்ப்பை அவர் வாய்க்கப்பண்ணுகிறபடியினால் நம் கரத்தை நீட்டி நாம் அவருக்கென்று பணி செய்யலாம். அவ்விதம் எதைச் செய்தாலும் சிறப்பாக, மனமார அவருக்கென்று செய்யும் போது, அதன் மூலம் கர்த்தாகிய கிறிஸ்துவை சேவிக்கிறதினாலே சுதந்திரமாகிய பலனை அவராலே பெறுவோம்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/wORJJ1pX0XI