உறவு: அவரை அறிந்தார்கள்

Home » உறவு: அவரை அறிந்தார்கள்

உறவு: அவரை அறிந்தார்கள்

ஒருவரைக் காண்பதற்கும் அவரை அறிவதற்கும் வித்தியாசம் உள்ளது. கர்த்தருடைய வேதமும் அப்படித்தான். அதை வாசித்தால் மாத்திரம் போதாது, விளங்கிக்கொள்ள வேண்டும். வார்த்தையாகிய அவரை நாம் விளங்கிக்கொள்ள வேண்டுமென்றால் வார்த்தையாகிய தேவவசனத்தை அவரே நமக்கு விளங்கக்காட்ட வேண்டும்.

அவர் வசனத்தை விளங்கக் காட்டி போதிப்பதில் வல்லவர்தான். ஆனால் புரிந்துகொள்ளக்கூடிய திறன் நமக்கு இருந்தால்தான் விளக்கம் சொல்லக்கூடிய அவரது திறன் நம்மில் கிரியை செய்ய முடியும். ஆனால் இங்கும் அவரே நமக்கு உதவி செய்கிறார். அவர் நமது புரிதலை விரிவாக்குகிறார். அவர் பேசுவது சிறப்பாக இருக்கிறபடியால் அவர் பேசப்பேச அதை கேட்கும் வாஞ்சை நமக்கு அதிகமாகிறது. அவர் நமக்கு புரியும் விதத்தில் பேசுவதால் போகப்போக வேத வாசிப்பின் அனுபவம் இனிதாக மாறிவிடுகிறது.

இது நாமே வருவித்துக்கொள்ளக்கூடிய விஷயமல்ல, கிருபையே அதை நமக்கு வருவித்துத்தர வேண்டும். கிருபை அதைச் செய்தே தீரும், அதன் விளைவாக மற்ற காரியங்களில் இருக்கும் ஈர்ப்பைப் பார்க்கிலும் அவரது வார்த்தையில் அதிக ஈடுபாடு நமக்கு உண்டாகிறது. அவருடைய வார்த்தையாகிய அக்கினி நமக்குள் பற்ற வைக்கப்படும்போது அவர் பேசுவதைக் கேட்கக் கேட்க அது கொழுந்துவிட்டு எரியத் துவங்குகிறது.

வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா. (லூக்கா 24:32)

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/x98QHZVIFTg

>