உறவு… காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்

Home » உறவு… காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்

உறவு… காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்

நீங்கள் ஞானமற்றவர்களைப் போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப் போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப் படுத்திக்கொள்ளுங்கள் என்று எபேசியர் 5:15,16 வசனங்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன. கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் காலங்களையும், சமயங்களையும் அறிகிற அறிவைப் பெற்றுக்கொண்டு, அதன்படி ஜாக்கிரதையாக நடக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.

உலகத்தாரைப் பொறுத்தவரை அவர்களுக்கு பொருள்தான் ஆதாரம். ஆனால் வேதமோ மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று கூறுகிறது. ஆக, வார்த்தை தெரிந்தவர்கள் வாழத் தெரிந்தவர்கள். கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக இருக்கும் நாம் அவரோடு உறவில் இருப்பவர்கள். அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞானத்தை, அதாவது அந்த மெய்ஞானத்தினால் கிடைக்கும் வெற்றியை வைத்திருக்கிறார்.

இவ்வுலகம் கேடான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. ஆகவே நன்மை செய்ய முடியாத நாட்கள் வரும். ஆகவே நாம் ஜாக்கிரதையாக காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொண்டு அவர் நமக்கு நியமித்த நன்மையைச் செய்து முடிக்க வேண்டும். நாம் பாடுகளைச் சகித்துக்கொண்டு அப்படி செய்யும்போது நமது சகிப்புக்கு முற்றுப்புள்ளி இருக்கிறது, நமக்கு மேன்மையான சிங்காசனம் வைக்கப்பட்டிருக்கிறது. அவர் ஏற்கனவே ஜெயித்திருக்கிறார். அந்த ஜெயகிறிஸ்துவோடு நமக்கு உறவு இருக்கிறது. ஆகவே நாமும் ஜெயிக்கிறவர்களாக இருக்கிறோம்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/x2AFcr3gZ7I

>