ஆதாமின் பாவத்தின் விளைவாக அவனுக்குள் இருந்த அதிகாரம் பிசாசுக்கு கை மாறியது. எனவே மனிதனை அடிமைப்படுத்திய பிசாசானவன் அவனை தொடர்ந்து அடிமைத்தனத்திலேயே வைத்திருக்கும்படி அவனது மனக்கண்ணைக் குருடாக்கினான். எனவேதான் முன்யோசனையின் தேவனானவர் ஒரு மாபெரும் மீட்பின் திட்டத்தை செயல்படுத்தி மனிதனை விடுதலை செய்தார்.
கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் மூலம் கர்த்தராகிய இயேசு துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு அதை வெளியரங்கமாக்கி சிலுவையில் பகிரங்கமாக வெற்றி சிறந்தார். அப்படிப்பட்ட பகிரங்க வெற்றியை அவர் பெற்று அந்த வெற்றி ஊர்வலத்தில் நம்மையும் பங்குகொள்ளச் செய்திருக்கிறார். இனி இந்த சத்துருவைக் கண்டு நீ பயப்பட வேண்டியதில்லை இவன் முற்றிலும் வீழ்த்தப்பட்டான் என்று நமக்குக் காட்டவே இந்த வெற்றி ஊர்வலம்.
அப்படியிருந்தும் இன்னும் பிசாசானவனால் எப்படி கிரியை செய்ய முடிகிறது? கொலோசெயர் 2:10 சொல்லுகிறபடி கர்த்தராகிய இயேசு சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் தலைவராக இருக்கிறார். அவருக்குள் பரிபூரணமாக இருக்கும் நாம்தான் அவனை ஜெயிக்க முடியும். அவனை அப்படி ஜெயிப்பதற்கு அவர் நமக்கு வல்லமையும் அதிகாரமும் அதை செயல்படுத்துவதற்கான திறமையும் கொடுத்திருக்கிறார்.
நம்மை நேரடியாக எதிர்க்க முடியாமல் மற்றவர்களைக் கொண்டு நம்மைத் தூண்டிவிட்டாலும் இறுதியில் நம்மை ஜெயிக்க வைப்பவராக கர்த்தர் நம் கூடவே இருக்கிறார்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/Kxkk5hTCOSk